சக்கர நாற்காலியில் அமர்ந்தவாறே உலகம் புகழும் விஞ்ஞானியான ஸ்டீபன்!

'எதனை இழந்தீர்கள் என்பதல்ல என்ன மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம்!'

செவ்வாயில் விவசாயம் செய்யலாம் வாங்க : நம்பிக்கை அளிக்கும் கியூரியோசிட்டி

ஆறடி நிலம் மட்டுமே சொந்தம் என ஆறுதல் தத்துவங்கள் பேசினாலும் ஆகாயத்தையும் தாண்டி நிலத்தை சொந்தமாக்கும் ஆராய்ச்சிகளுக்கு...

மரணப் பள்ளத்தாக்கும் நடமாடும் கற்களும்!

நம்பமுடியாத நம்பிக்கைகள் பல நம்மில் நாடி, நாளங்களில் பாயும் குருதியாய் மாறி நம்பவேண்டிய சில...

அதிகரிக்கும் தகவல் திருட்டு : பாதிப்படையும் அமெரிக்க நிறுவனங்கள்

காலத்தின் தேவைக்கேற்ப ஒவ்வொரு விடயமும் பரிணாமமடைந்து வருவதைப் போல திருட்டும் ஒரு வழியாக தனது அடுத்த பரிணாமத்தை நோக்கி...

புத்தம் புதிய பூமி தேடும் கெப்ளர்

தேடலிள்ள சுவாரஸ்யத்தினை எப்போதும் அனுபவித்துக்கொண்டிருப்பதே அறிவியல் உலகிற்கு...

Total Pageviews

Friday, May 20, 2016

மீண்டும் உயிர் பெறும் வூலி மமத்!!!

பூமியில் அழிவடைந்த உயிரினங்களான டைனோஸர்கள், வுலி மமத், டூடோ போன்றவை மீண்டும் பூமியில் புத்துயிர் பெற்று வாழ ஆரம்பித்தால் எப்படி இருக்கும்?

கற்பனைகளை நாம் தவளவிடும்போதே விஞ்ஞானிகள் அதனை நடக்க வைக்க திட்டமிட்டுவிட்டார்கள்.

பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னர் பூமியிலிருந்து முற்றாக அழிவடைந்துவிட்ட உயிரினங்கள் தொடர்பாக பல்வேறு தகல்களை வெளியிட்டு வரும் ஆராய்ச்சியாளர்கள் விரைவில் அவற்றை பூமியில் புத்துயிர் பெற வைக்கும் முயற்சியில் தற்போது இறங்கியுள்ளனர்.



டைனோசோர்கள், டூடோ, வூலி டைனோஸர் போன்ற பல விலங்குளின் எச்சங்களைக் கொண்டு அவ்வுயிரினம் தொடர்பில் நீண்டாகலமாக ஆராய்ச்சிகளை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

இதில் சுமார் 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் முற்றாக அழிவவடைந்துவிட்டதாக நம்பபப்படும் வூலி மமத் என அழைக்கப்படும் மயிர்களைக்கொண்ட ஒரு வகை யானையும் ஒன்று.

2 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னதாக வாழ்ந்ததாக அறிவியில் உலகம் நம்பபும் டைனோஸோர்களின் எச்சங்கள் கிடைப்பது போல விஞ்ஞான ரீதியாக அண்மையில் அதாவது சுமார் 10 வருடங்களுக்கு முன்னர் வரையில் வாழ்ந்த வூலி மமத்களின் எச்சங்களும் மீட்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அந்த வூலி மமத்தினையும் மீண்டும் உயிர்கொடுத்து பூமியில் நடமாடவிடும் முயற்சியினை ஆரம்பித்துள்ளனர். இத்திட்டத்தினை ரஷ்ய மற்றும் கொரிய விஞ்ஞானிகள் முன்னெடுக்கின்றனர்.

குளோனிங் முறையில் மனிதனை உருவாக்க முடியாது. அது கடவுள் நம்பிக்கை மற்றும் வேறுபல காரணங்களால் தடை செய்யப்பட்டுள்ளது. மறைந்த உயிரினத்தினத்திற்கு புத்துயிர் இந்த திட்டத்திற்கு எதிர்காலத்தில் எதிர்ப்புக்ள வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

உலகின் முதலாவது குளோனிங் முறையிலான 'டோலி' எனும் ஆட்டை உருவாக்கிய தண்டுக் கலம் தொடர்பான விஞ்ஞானி சேர் இயன் வில்மட் இத்திட்டம் தொடர்பில் கூறுகையில், வரலாற்றுக்கு முந்தைய விலங்கினை நவீன தொழில்நுட்பங்கள் மூலம் உருவாக்க முடியும் எனத் தெரிவித்துள்ளார்.

ஜுரஸ்ஸிக் பார்க் திரைப்படத்தின் மூலமாகவே இந்த சிந்தனை தோன்றியதாகவும் இத்திட்டத்தினால் அழிவடைந்த விலங்கினை மீண்டும் உலகில் நடமாடச் செய்யமுடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய நிலைமையில் மீட்கப்பட்டுள்ள மமத்தின் எச்சங்களிலிருந்து செயற்திறன்மிக்க டி.என்.ஏ.யினை பெறுவது சவாலான ஒரு வியடம். ஆனால் இதனை மீறி அவற்றைப் பெற்றால் பிரயோசமானதும் ஆர்வமானதுமான விடயங்களை மேற்கொள்ள முடியும்.



கடந்த வருடம் சைபீரியாவிலிருந்து குளிரில் உறைந்த நிலையில் மீட்கப்பட்ட மமத்கள் கண்டெடுக்கப்பட்டன.

இவற்றில் சிறந்த நிலையில் பாதுகாக்கப்பட்ட யூகா என்ற குழந்தை பெண் மமத் ஒன்று உள்ளது. இதுவே சுமார் 39 ஆயிரம் வருடங்கள் பழைமையானது. தற்போது இந்த யூகா ஜப்பானில் கட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் மாதிரிகள் சிலவற்றை தென் கொரியா மற்றும் ரஷ்ய ஆராய்ச்சியாளர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இந்த மாதிரிகளில் பல ஆயிரம் வருடங்களாக பனியில் உறைந்தவை. குளிரில் விரைவாக டி.என்.ஏ சிதைவடையக்கூடியது. எனவே இம்மாதிரிகளிலிருந்து செயற்திறனான டி.என.ஏ.யை பெறுவது ஆராய்ச்சியாளர்களுக்கு சவாலாக அமையும் எனத் கூறியுள்ளார் சேர் இயன் வில்மட்.

முளைய வளர்ப்பு முறையினை விட நவீன தண்டுக் கல தொழில்நுட்பத்தினால் உறைந்த கலங்களிலிருந்து சிறந்த கலங்களை பிரித்தெடுக்கலாம். இந்த முறையில் ஏற்கெனவே எலி உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தண்டுக் கல தொழில்நுட்பம் 50 வருடங்களுக்கு முன்னர் வளர்ச்சி பெற்றிருந்தால் வூலி மமத்தினை உருவாக்கியிருக்கலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை உறைந்த உடலிலிருந்து சிறந்த கலங்கள் பிரித்தெடுக்க முடியாவிட்டால் மீண்டும் உலகிற்கு கிடைக்கும் வாய்ப்பு கிட்டுவதற்கான சாத்தியம் குறைவு எனக் கூறப்படுகின்றது.

இருப்பினும் இத்திட்டம் சாத்தியப்பட்டால் பாடப் புத்தகங்களில் மட்டும் பார்த்தறிந்த வூலி மமத்தினை நாம் நேரிலும் கண்டு மகிழும் வாய்ப்பு உருவாகும் என்பது அறிவியல் உலகின் எதிர்பார்ப்பாக உள்ளது.

(இவ்வாக்கம் ஏற்கனவே பாத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.)

-அமானுல்லா எம். றிஷாத்.
(இந்த வலைப்பூவிலிருந்து ஈ அடிக்கும் பட்சத்தில் எழுதியவரின் பெயரையும் சேர்ந்து ஈயடிக்குமாறு ஈயடிச்சான் தொழில்நுட்பவியலாளர்களை கேட்டுக்கொள்கிறேன்.)

Blogger Tricks

Monday, May 16, 2016

புறூஸ் லீயின் தனித்துவமான ஒரு அங்குல குத்து : கேமராவில் படம் பிடிக்க முடியாத வேகம்



எந்த துறையானாலும் அந்த துறையில் தனித்துவமாக செயற்படுகின் றவர்களுக்கான இடம் என்பது என்றைக்கும் நிரந்தரமாகிவிடுகின்றது.

அந்த வகையில் தற்காப்புக் கலையினை தனக்கான பாணியில் மக்களை கவர்ந்த உன்னதமான கலைஞன் புறூஸ் லீ. உலகின் பல பாகங்களிலும் தற்காப்புக் கலை வளர்வதற்கு பிரபல்யமடைவதற்கும் நடிகரும் தற்காப்புக் கலைஞருமான புறூஸ் லீயின் பங்கு அளப்பரியது.


குங்பூ, கராத்தே, வில்வித்தை, வாள் சண்டை போன்ற ஏராளமான தற்காப்புக் கலைகள் இன்று பல நாடுகளில் பல விதமான முறைகளில் பிரபல்யடைந்துள்ளன. ஆனால் அனைத்து தற்காப்பு கலை விரும்பிகளுக்கும் பொதுவான ஒரு முன்னுதாரணமாய் இன்றும் இருப்பவர் புறூஸ் லீ.

எந்த ஒரு தற்காப்புக் கலைஞனை விடவும் வேகமாகவும் விவேகமாகவும் தனித்துவமான தற்காப்பு நகர்வுகளை புறூஸ் லீ கையாண்டிருந்தமையும் அதற்கான காரணமாக இருக்கலாம். குறிப்பாக ஒரு அங்குலம் மற்றும் 6 அங்குலம் இடைவெளியிலான புறூஸ்லியின் குத்து இன்றும் பிரமிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.

தற்காப்பு கலையை விட பிரபல்யமும் அச்சரியமிக்கதுமான குத்து அவை. இந்த குத்து கில் பில் எனும் ஹொலிவூட் திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
32 வயதில் மர்மமான முறையில் உயிரிழந்த புறூஸ் லீயை ஆராதிக்கும் ரசிகர்கள் இன்றும் உள்ளனர். ஒரு வகையான வலிப்பு மற்றும் தலைவலி காரணமாக உயிரிழந்ததாகக் கூறப்பட்டாலும் இவரது மரணத்தின் மர்மம் புதிராகவே நீடிக்கின்றது. அது போலவே புறூஸ் லீயின் தனித்துவமான சிறிய இடைவெளியிலமைந்த குத்துக்களும்.

இதனால் புறூஸ் லீயின் நகர்வுகள் குறித்து இப்போதும் ஆய்வு செய்யப்படுகின்றது. உலகின் மிக குறைந்த வெப்பமளிக்கா காலம் கொண்டவராக புறூஸ் லீ கருதப்படுகின்றது. இதுவே அவரது வேகமான செயற்பாட்டுக்கு காரணம் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

ஆனால் தனித்துவமான குத்துக்களுக்கு விஞ்ஞான ரீதியிலான விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
ஒரு அங்குல இடைவெளி குத்தானது தசையை விட அதிகளவில் மூளையுடன் தொடர்புடையதாக உள்ளது ஏன் என அறிந்து கொள்ள வேண்டும். இச்சிக்கலான முழு உடல் அசைவில் அமைந்து குத்து மில்லி செக்கனில் இடம்பெறும் செயற்பாடு. இருப்பினும் புறூஸ் லீ எவ்வாறு அதனை மேற்கொள்கிறார் என அறிய அவதானிப்பு முக்கியமானது என்கிறது இந்த ஆய்வு.

இவ்வாய்வினை அமெரிக்காவின் ஸ்டேன்போர் பலகலைக்கழக உயிரியல் இயந்திரவில் ஆய்வாளரான ஜேஸிக்கா ரோஸ் மேற்கொண்டுள்ளார். இது குறித்து ஜெஸிகா கூறுகையில், 'குத்துக்கான அசைவு கால்களில் இருந்து ஆரம்பமாகின்றன. ஒரு அங்குல குத்தினை உன்னிப்பாக அவதானிக்கும் போது புறூஸ் லீயின் முன் மற்றும் பின் கால்கள் விரைவில் நேராக வந்து அதிவிரைவில் வந்து செல்வதை உங்களால் காண முடியும்' என்கிறார் ரோஸ்.


கால் இவ்வாறு நேராகும் போது இடுப்பினூடாக தோட்பட்டைக்கு சக்தி கடத்தப்பட்டு கைக்கு செல்கின்றது. இதனால் மில்லி செக்கன் இடைவெளியில் கையில் கிடைக்கும் ளூஒன்று சேர்க்கப்பட்ட சக்திளூயால் எதிரியை ஒரேயொரு, ஒரு அங்குல குத்தினால் புறூஸ் லீயினால் வீழ்த்த முடிந்துள்ளது என விளக்களித்துள்ளார் ஆய்வாளர் ரோஸ்.

குறைந்த நேர இடைவெளியில் இடம்பெறும் இந்த குத்து குறித்து ரோஸ் கூறுகையில், 'இந்த ஒருங்கிணைப்பில் தசை நார்கள் ஆதிக்கம் செலுத்துவதில்லை. அத்துடன் ஒரு அங்கு இடைவெளி போன்ற குத்துக்களுக்கு பிரதான பின்னணி காரணியாக ஒருங்கிணைப்பும் நேரமைப்புமே முக்கிய காரணிகளாக அமைந்துள்ளன' என்கிறார் ரோஸ்.


2012ஆம் ஆண்டிலும் இந்த உடலமைப்பு முறையில் சிறிய இடைவெளியில அமைகின்ற குத்து குறித்து லண்டன் இம்பெரியல் கல்லூயின் நரம்பியல் விஞ்ஞானியான எட் ரொபேர்ட்ஸ் என்பவரும் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



இதேபோன்று புறூஸ் லீயின் வேகம் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. ஹொங்கொங் வம்சாவளியான புறூஸ் லீ, 1940ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27ஆம் திகதி கலிபோர்னியாவில் பிறந்து ஜுலை 20ஆம் திகதி 1973ஆம் ஆண்டு தனது 32ஆவது வயதில் ஹொங்கொங்கில் மர்மமாக மரணமானார்.


அமெரிக்க ஆசிரியையான லிண்டா எமிரியை 1964ஆம் ஆண்டு திருமணம் செய்தார். இவர்களுக்கு பிரண்டன் லீ என்ற ஆண் குழந்தையும் ஷனொன் லீ என்ற பெண் குழந்தையும் பிறந்தனர். புறூஸ் லீயைப் போன்று செயற்பட்ட அவரது மகனும் ஹொலிவூட் நடிகருமான பிரண்டன் லீ படப்பிடிப்பின் போது தவறுதலாக சுடப்பட்டு 28ஆவது வயதில் 1993ஆம் ஆண்டு உயிரிழந்தார்.

சிறு வயது முதல் தற்காப்புக் கலையில் நாட்டம் கொண்டிருந்த புறூஸ் லீ தற்காப்புக் கலையை ஐபி மேன் என்பவரிடம் கற்றார். தனது தனித்துவமான திறனால் 1969 முதல் 1973ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் மார்லோவ், த பிக் பொஸ், பிஸ்ட் ஒப் பியூரி, வே ஒப் ட்ரகன், எண்டர் த ட்ரகன் மற்றும் கேம் ஒப் த டெத் (முழுமையாக முடிக்கப்படவில்லை) ஆகிய 6 படங்களில் மட்டுமே நடித்து நாயகனாகவும் பெரு வெற்றி பெற்றார். புறூஸ் லீயின் படங்கள் இன்றும் அவரது சண்டைகளுக்காக ரசிக்கப்படுகின்றது.





இக்காலப் பகுதியில் கெமராவின் செக்கனுக்கான பிரேம் தற்போதைய கெமராவுடன் ஒப்பிடுகையில் பல ஆயிரம் மடங்கு குறைவு. இதனால் படப்பிடிப்பில் இவரது அதிவேகமான சண்டைகளை படம் பிடிக்க முடியாமல் அவரது நிஜமான வேகத்தினைக் குறைத்து படம்பிடிக்கப்பட்டுள்ள சம்பவங்களும் இடம்பெற்றுள்ளது.


அதி திறன்மிக்க இக்கலைஞனால் குறித்த காலப் பகுதியில் சீனப் பிராந்தியங்களில் தற்காப்புக் கலை நிலையங்கள் வெகுவாக அதிகரித்ததாகக் கூறப்படுகின்றது. புறூஸ் லீயின் மரணத்தின் பின்னர் அவரது மனைவி தற்காப்புக் கலையை வளர்க்கும் முயற்சியில் ஈடுபட்டதுடன் அவரது மகள் தற்போதும் ஈடுபடுகின்றார்.

புறூஸ் லீ தனது 32 வயதில் மரணமடைந்த போதிலும் இன்னும் 32 தலைமுறைகளானாலும் மறக்க முடியாத தனித்துவக் கலைஞராக வரலாற்றில் வாழ்ந்துகொண்டிருப்பார்.

-ஏ.எம்.ஆர்

Saturday, May 14, 2016

அஜித்துக்கு வில்லன் விஜய் : இதெல்லாம் நடக்குற காரியமாங்க?


வேதாளம் படத்தின் வெற்றிக்குப் பிறகு 3ஆவது முறையாக மீண்டும் சிவா இயக்கத்தில் தல நடிக்கவுள்ளாhர். சத்யஜோதி பிலிம் தயாரிக்கும் இந்த படத்தின் ஷுட்டிங் எதிர்வரும் ஜுலை மாதத்தில் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாம். இது எல்லோருக்கும் தெரிந்ததுதான்.

ஆனால் யாருமே எதிர்பார்க்க விஷயம் ஒன்று இந்த படத்தில் நடக்கவள்ளதாக உடான்ஸ் செய்திகள் தெரிவிக்கின்றன. அதாவது தலயின் 57 ஆவது படத்துல தலக்கு வில்லனா நம்ம விஜய் சேதுபதி நடிக்கப்போறாராம்.

என்னை அறிந்தால் படத்தில் அருண் விஜய் நடிச்ச மாதிரியான ஒரு டெடரான வில்லன் கதாபாத்திரத்துல விஜய் சேதுபதி நடிக்கப்போறதாகவும் அது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

ஏங்க இதெல்லாம் நடக்குற காரியமா? ஆனா நடந்தா தியேட்டரே அதிருமில்ல... என்ன நான் சொல்றது.

வீடியோ வடிவிலான செய்திகளுக்கு


Vijay joins with Ajith for THALA57



Thala Ajith is going to join for 3rd time with director Siva after the huge success of Vedhalam & Veeram movie. Thala-Siva project's shooting will kick start from coming July that is produced by Sathya Jothy films. We know all of this story.


Unconfirmed sources say that "an unpredictable thing happened for Thal57, that is the versatile actor Vijay Sethupathy joins with Thala for this movie as a baddy and Vijay Sethupathy is almost confirmed to join the project. His character will be the talk of the town as Yennai Arinthaal's Victor character of Arun Vijay "


Is it possible? But if it has done then theatre will be blasting.



Friday, May 13, 2016

நியாயத்தை அநியாய விலையில் வாங்கிவிட்டான் முதலாளி

நியாயம் என்ற ஒன்று ஒன்று எங்கேயாவது இருக்கும். அதை தோண்டி எடுக்கபோகிறேன் எனத் தேடினால் நியாயத்தை அநியாய விலையில் விற்கின்ற முதலாளியிடமே அதன் கடப்பாறையும் சிக்கிக்கொண்டிருக்கிறது.
 
10:1 என்ற விகிதத்திலேயே எனக்கு மொழிபெயர்ப்பு கதைகள் பிடிக்கும் அப்படி பிடித்ததில் இதுவும் ஒன்று. புது அனுபவத்தை தருகிறது இந்தக் கதை. இந்தக் கதையை மொழிபெயர்த்தது யார் எனத் தெரியவில்லை. அவருக்கு வாழ்த்துக்கள்.
 
 
 
அறிவியல் புனைகதை - ஜீன் திருடனின் விநோத வழக்கு
(மூலம் நான்ஸி க்ரெஸ்)
(இன்றைய விஞ்ஞானக் கதை எழுத்தாளர்களில் முக்கியமானவர் நான்ஸி க்ரெஸ். சிக்கலான
மரபணு விஞ்ஞானக் கதைகளுக்குப் பெயர் போனவர். அமெரிக்கர். நெபுலா, ஹ்யூகோ
போன்ற விருதுகள் பெற்றவர். Asimov 's இதழில் 2002-ஆம் வருடம் வெளிவந்த Patent
Infringement என்ற கதையின் தமிழாக்கம் து. வர் எழுதிய 'ட்ரினிட்டி ' போன்ற மிகச்
சிறந்த விஞ்ஞானக் கதைகள் அளவில் பெரியவை. தமிழில் மொழிபெயர்க்கக் கடினமானவை.
இது சாதாரணமான கதையே என்றாலும் அளவில் சிறியது. பத்திரிகை செய்தி, கடிதங்கள்,
அலுவலக மெமோக்கள் மூலம் சொல்லப்பட்டிருப்பது தன் சிறப்பம்சம். நான்ஸி க்ரெஸ்ஸின்
இணைய தளம்: www.nancykress.com)
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
- -
நியூயார்க் போஸ்ட்
விஷக் காய்ச்சலுக்குப் புதிய மருந்து கண்டுபிடிப்பு !
கெகல்மான்-பால்ஸ்டன் கம்பெனியினர் ஹாலிடெக்ஸ் என்ற புதிய மரபணு மருந்தை
மார்க்கெட்டில் அறிமுகப்படுத்தி ருக்கிறார்கள். அல்பர்ட்டன் விஷக் காய்ச்சலுக்குப் பத்து
மாத்திரைகளில் முற்றிலும் குணம் தெரியும் என்று கம்பெனி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதுவரை அமெரிக்கா முழுவதும் மூன்று கோடி பேருக்கு மேல் ந்தக் கடுமையான தொற்று
நோய்க்கு ஆளாகியிருக்கிறார்கள். மிக வேகமாகப் பரவி வரும் ந்த வைரஸ்
பாதித்தவர்களுக்கு ருமல், உடல் வலி, களைப்புடன் காய்ச்சல் ஏற்படும். நோய் அறிகுறிகள்
மறைந்த பிறகும் வைரஸ் உடலுக்குள்ளேயே தங்கியிருப்பதால் எப்போது வேண்டுமானாலும்
மறுபடி காய்ச்சல் வர வாய்ப்புள்ளது. ந்த வைரஸை முதன் முதலில் அடையாளம்
கண்டுபிடித்தவர் ப்ரொபஸர் அல்பர்ட்டன்.
 
அல்பர்ட்டன் வைரஸின் பாதிப்பால் அமெரிக்காவில் ந்த வருடத்தில் மட்டும் 4 பில்லியன்
டாலர்கள் நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக முதன்மைக் கணக்காயர் அலுவலகக் குறிப்பொன்று
தெரிவிக்கிறது. ஹாலிடெக்ஸ் மருந்து நோயாளிகளின் உடலில் ந்த வைரஸுக்கு மாற்று மரபு
அணுக்களைச் செலுத்தி நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டுகிறது. மறுபடி காய்ச்சல் வராமலும்
பாதுகாக்கிறது. கெகல்மான்-பால்ஸ்டன் கம்பெனி ரண்டு வருட ஆராய்ச்சியின் பயனாக
இந்த மருந்தைக் கண்டுபிடித்திருக்கிறது. நாடு முழுவதும் ஹாலிடெக்ஸ் பரவலான வரவேற்பு
பெறும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
 
ஜோனதன் மீஸ்
538, ப்ளெஸன்ட் தெரு
ஆஸ்பன் ஹில், மேரிலாண்ட் 20906
 
அன்புள்ள திரு.கெகல்மான்- திரு. பால்ஸ்டன் அவர்களுக்கு,
 
உங்கள் கம்பெனி அல்பர்ட்டன் விஷக் காய்ச்சலுக்கு ஹாலிடெக்ஸ் என்ற ஜீன் சிகிச்சை
மருந்தை அறிமுகப் படுத்தியிருப்பதாக செய்தித்தாள்கள் மூலம் அறிந்தேன். ந்த மருந்தில்
நீங்கள் உபயோகித்திருக்கும் ஜீன்கள் என்னுடையவை என்று நம்புகிறேன்.
இரண்டு வருடம் முன்பு - மே 5ம் தேதி - என்னுடைய குடும்ப டாக்டரிடம்
பேசிக்கொண்டிருந்த போது என்னைச் சுற்றியிருக்கும் எல்லாருக்கும் அல்பர்ட்டன் காய்ச்சல்
பரவியிருக்கிறது என்று தெரிவித்தேன். (எங்கள் அலுவலகத்தின் அக்கவுண்ட்ஸ்
டிபார்ட்மெண்ட் முழுவதற்கும் காய்ச்சல். என் மனைவி, குழந்தைகள், மாமியார்
எல்லோருக்கும் படுத்து விட்டார்கள். எங்கள் வீட்டு நாய்க்குக் கூட ந்த வைரஸ்
தாக்கியிருப்பதாக சந்தேகம்- ஆனால் வெட்னரி டாக்டர்தான் ஒத்துக் கொள்ளவில்லை.)
 
இத்தனைக்கு நடுவிலும் எனக்கு மட்டும் ஜுரம் வரவில்லை. என்னுடைய ஜீன்களில் ஏதோ
தனிப்பட்ட நோய் எதிர்ப்பு சக்தி ருப்பதாக என் டாக்டர் சந்தேகித்து உடனே உங்கள்
ஆராய்ச்சிசாலைக்கு அனுப்பி அங்கே என் ரத்தம், திசு சாம்பிள்கள் எடுக்கப்பட்டன. உங்கள்
விஞ்ஞானிகள் என்னுடைய ஜீன்களை எதற்காவது பயன்படுத்தினால் தகவல் சொல்வதாகச்
சொல்லி அனுப்பி வைத்தார்கள். ஆனால் ன்றுவரை ஒரு தகவலும் வரவில்லை.
இதற்கிடையில் ந்தப் பத்திரிகை செய்தியைப் பார்த்தேன்.
 
ஆகவே உங்கள் புதிய மருந்தில் என்னுடைய ஜீன்கள் எப்படிப் பயன் பட்டிருக்கின்றன
என்பதையும், லாபத்தில் எனக்கு நியாயமாகச் சேர வேண்டிய பங்கு எவ்வளவு என்பதையும்
தயவு செய்து தெரிவிக்கவும். மிக்க நன்றி.
தங்கள் உண்மையுள்ள,
ஜோனதன் மீஸ்
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
- -
கெகல்மான்-பால்ஸ்டன் கம்பெனி
அனுப்புநர்: ராபர்ட் பால்ஸ்டன்
பெறுநர் : மார்ட்டின், சட்டத் துறை
பொருள் : கடிதம் (இணைப்பு)
மார்ட்டி,
யார் இவன், கிறுக்கனா ? இதில் ஏதும் பிரச்சினை வருமா ?
- பாப்
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
 
கெகல்மான்-பால்ஸ்டன் கம்பெனி
அனுப்புநர்: மார்ட்டின்
பெறுநர் : ராபர்ட் பால்ஸ்டன்
பொருள் : மரபணு உரிமை - ஜோனதன் மீஸ் கடிதம்
 
பாப்,
 
ஆராய்ச்சிப் பிரிவில் விசாரித்து விட்டேன்; துரதிர்ஷ்டவசமாக, இந்த ஜோனதன் மீஸ் என்கிற
ஆளின் மரபணுக்களை வைத்துத்தான் நாம் ஹாலிடெக்ஸையே தயாரித்திருக்கிறோம். அதற்கு
எல்லா ரெக்கார்டும் ருக்கிறது. அதைவிட சங்கடம் என்னவென்றால், ஜீன் சாம்பிள்
தருபவர்களின் உரிமைகளை ரத்து செய்ய நாம் சட்டம் கொண்டுவரச் செய்தோமே, அதற்குச்
சற்று முன்புதான் அவன் வந்துபோயிருக்கிறான்.
 
எப்படியிருந்தாலும், இந்த ஆசாமிக்கு சட்டப்படி எந்த உரிமையும் கிடையாது என்பதுதான்
என் கருத்து. மருந்துப் பொருள்கள் தயாரிக்கப் பயன்படும் ஜீன்களின் பேடண்ட் எல்லாம்
கம்பெனிக்கே சொந்தம் என்பதற்குப் பல கோர்ட் தீர்ப்புகள் வந்திருக்கின்றன. ந்தக்
கடிதத்தை வைத்துப் பார்த்தால் மீஸ் அப்படி ஒன்றும் விவரமான ஆளாகவும் தெரியவில்லை.
(நாய்க்காவது, வைரஸாவது!) திரு. கெகல்மான் செத்துப் பத்து வருஷம் ஆகிவிட்டது என்பது
கூட வனுக்குத் தெரியவில்லையே....அவன் ன்னும் வக்கீல் யாரையும் பார்க்கவில்லை
என்பது நிச்சயம்.
 
ஏதோ போனால் போகிறதென்று கொஞ்சம் சில்லறையை வீசியெறிந்து அவனை வாயை மூடிக்
கொண்டிருக்கச் சொல்லலாம். ஆனால் ந்த மாதிரி பேராசைக்காரர்களுக்கெல்லாம் காசு
தருவதே தப்பு. என்னைக் கேட்டால் வனைக் கடுமையாக மிரட்டி ஒரு லெட்டர்
அனுப்பினால் போதும். பயத்தில் பாண்ட்டிலேயே கொஞ்சம் பாத்ரூம் போய்விட்டு, அத்துடன்
அடங்கிவிடுவான்.
என்ன சொல்கிறீர்கள் ?
- மார்ட்டி
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
 
கெகல்மான்-பால்ஸ்டன் கம்பெனி
அனுப்புநர்: ராபர்ட் பால்ஸ்டன்
பெறுநர் : மார்ட்டின், சட்டத் துறை
பொருள் : J. மீஸ்
அதைச் செய்!
- பாப்
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
 
மார்ட்டின் ப்ளேக்
தலைமை சட்ட ஆலோசகர்
கெகல்மான்-பால்ஸ்டன் கம்பெனி
 
அன்புள்ள திரு மீஸ்,
 
எங்கள் கம்பெனியால் காப்புரிமை பெறப்பட்டுள்ள ஹாலிடெக்ஸ் மருந்தைப் பற்றிய உங்கள்
கடிதம், என் பார்வைக்குக் கொண்டுவரப் பட்டது. ஹாலிடெக்ஸின்மீது உங்களுக்குச்
சட்டபூர்வமான எந்த உரிமையும் ல்லை என்பதை தன்மூலம் அறியவும். (தங்கள்
தகவலுக்காக, சில சட்ட முன்னுதாரணங்களை த்துடன் ணைத்துள்ளேன்.) க்கடிதம்
பெற்ற பிறகும் தங்கள் தாவாக்களை உடனே விலக்கிக் கொள்ளவில்லையென்றால், தாங்கள்
என் கட்சிக்காரருக்கு மன உளைச்சல் தருவதற்காக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்
என்பதை அறியவும்.
 
உண்மையுள்ள,
மார்ட்டின் ப்ளேக்
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
 
ஜோனதன் மீஸ்
538, ப்ளெஸன்ட் தெரு
மேரிலாண்ட் 20906
 
அன்புள்ள திரு ப்ளேக்,
 
இது கொஞ்சம் கூட நியாயமல்ல. அத்தனையும் என்னுடைய ஜீன்கள்!! நான் ஒரு வக்கீலிடம்
போகப் போகிறேன். விரைவில் அவர் உங்களிடம் பேசுவார்.
- ஜோனதன் மீஸ்
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
 
கேத்ரின் அட்வகேட்,
 
அன்புள்ள திரு ப்ளேக்,
என் கட்சிக்காரர் திரு. ஜோனதன் மீஸ் அவர்களின் சார்பில் நான் தை எழுதுகிறேன்.
அவருடைய மரபணுக்களை அடிப்படையாக வைத்து நீங்கள் ஹாலிடெக்ஸ் என்ற மருந்தைத்
தயாரித்திருக்கிறீர்கள் என்று அறிகிறேன். உங்கள் கம்பெனிக்கு லட்சக் கணக்கான - அல்லது
கோடிக்கணக்கான - டாலர்களைப் பெற்றுத் தரக்கூடிய ந்த மருந்தில் என் கட்சிக்காரரின்
கணிசமான பங்களிப்பை ஒப்புக் கொண்டு, அவருக்குச் சேரவேண்டிய பொருளாதார
ஈட்டையும் செய்வதே முறையாக ருக்கும் என்று நம்புகிறோம். தைப் பற்றி விரிவாக
நேரில் பேசுவதற்கு விரைவில் ஒரு நேரம் ஒதுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
உண்மையுள்ள,
கேத்ரின்
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
 
அனுப்புநர்: ராபர்ட் பால்ஸ்டன்
பெறுநர் : மார்ட்டின், சட்டத் துறை
பொருள் : J. மீஸ்
மார்ட்டி,
நாசமாய்ப் போச்சு! ந்த மாதிரி ஐந்தாம் படை வேலை செய்யும் மட்டிப் பயல்களைக்
கண்டாலே எனக்கு அடிமடியில் எரிகிறது. ஞாயிற்றுக் கிழமையன்று கோல்ப் விளையாடும்
போது ஸாம் ஒரு விஷயம் சொன்னான். (ஸாமைத் தெரியுமல்லவா உனக்கு ? நம் போட்டிக்
கம்பெனிகளைப் பற்றித் தகவல் கசியவிடுவானே, அவன்தான்). ர்வின்-லாஸி
கம்பெனிக்காரர்கள்தான் நம்மை ஒழித்துக் கட்டுவதற்காக ந்த வக்கீல் நோட்டாஸ்
அயோக்கியனைத் தூண்டிவிடுவதாக ஸாம் நினைக்கிறான்.
அந்த அப்பன் பேர் தெரியாத ராஸ்கல் - ர்வினும் தே வைரஸுக்கு மருந்து தயாரிக்கப்
படாத பாடு பட்டுக் கொண்டிருந்தான். நாம் முந்திக்கொண்டுவிட்டோமே என்று அவனுக்கு
வயிற்றெரிச்சல்! நிச்சயம் அவன்தான் தெல்லாம் செய்கிறான்.
இதில் சமாதானம் என்ற பேச்சுக்கே டமில்லை. அவன் தாராளமாகக் கேஸ் போடட்டும்.
கோர்ட்டுக்கு வரட்டும். பார்த்துவிடலாம் ஒரு கை!
- பாப்
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
 
அனுப்புநர்: மார்ட்டின்
பெறுநர் : ராபர்ட் பால்ஸ்டன்
பொருள் : மரபணு உரிமை - ஜோனதன் மீஸ்
பாப்,
அதை விட நல்ல ஐடியா : நாமே முந்திக்கொண்டு மீஸ் மீது கேஸ் போட்டால் என்ன ?..
வைரஸ் தடுப்பு ஜீன்களுக்கான பேடண்ட் நம்மிடம் ருக்கும்போது அவன் எப்படி அந்த
ஜீன்களைச் சுமந்துகொண்டு திரியலாம் ? ஹாலிடெக்ஸை வாங்கிச் சாப்பிட்ட நம்
வாடிக்கையாளர்களுக்கு மட்டும்தான் ந்த ஜீன்கள் ருக்கலாம். எனவே அவன் நம்முடைய
மருந்தைப் போலவே வேறு எதையோ கள்ளச்சந்தையில் வாங்கித் தின்றிருக்கிறான் என்று
வாதாட முடியும்.
 
இதனால் பல விதத்தில் லாபம் : மீஸின் வக்கீல் நோட்டாசுக்குப் பதிலடி தருகிற மாதிரியும்
இருக்கும்; போட்டிக் கம்பெனிகளின் காற்றைப் பிடுங்கிவிட்ட மாதிரியும் ருக்கும். நம்
ஹாலிடெக்ஸுக்கு ன்னும் கொஞ்சம் விளம்பரம் கிடைக்கும் (பூக்கடைக்கு விளம்பரம்
தேவையில்லை என்றாலும்). நம்மைப் பார்த்துக் காப்பியடித்துத் திருட்டு மருந்து தயாரிக்க
நினைப்பவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாகவும் அமையும்.
 
அப்புறம் ன்னொரு விஷயம் : நம் ஆராய்ச்சிப் பிரிவில் மறுபடியும் நன்றாக விசாரித்தேன்.
ஜோனதன் மீஸ் என்று யாரும் நம்மிடம் வந்ததாகவோ, மரபணு சாம்பிள் கொடுத்ததாகவோ
எந்த ரெக்கார்டும் கிடையாது.
- மார்ட்டி
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
 
அனுப்புநர்: ராபர்ட் பால்ஸ்டன்
பெறுநர் : மார்ட்டின், சட்டத் துறை
பொருள் : J. மீஸ்
மார்ட்டி,
என்ன மூளைய்யா உனக்கு!.. செய், ராஜா!.
ஆமாம், கேஸை விசாரிக்க யாராவது நல்ல ஜட்ஜ் வருகிறமாதிரி ஏற்பாடு பண்ண முடியுமா ?
திரு. பர்மிங்ஹாம் போல பிஸினஸ்காரர்களின் கஷ்டத்தைப் புரிந்துகொண்ட ஒரு நீதிபதி
கிடைத்தால் நன்றாக ருக்கும்.
- பாப்
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
 
நியூயார்க் டைம்ஸ்
ஹாலிடெக்ஸ் கள்ளச் சந்தை வழக்கு ன்று ஆரம்பம்
சட்ட விரோதமாக மரபணு மருந்துகள் சாப்பிட்டதாகக் கூறி ஜோனதன் மீஸ் மீது தொடுக்கப்
பட்ட வழக்கு ன்று மன்ஹாட்டன் கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது. பிரபல மருந்து
தயாரிப்பாளர்களான கெகல்மான்-பால்ஸ்டன் கம்பெனியினர் தொடுத்துள்ள ந்த வழக்கு சில
மாதங்களாகவே பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. குற்றம் சாட்டப் பட்ட ஜோனதன் மீஸ்,
தனியார் கம்பெனி ஒன்றில் அக்கவுண்டண்ட் ஆகப் பணியாற்றி வருகிறார்.
 
இது மரபணு காப்புரிமை, உயிரியல் பொருள்களின் மீதான உரிமை போன்றவற்றின் சட்ட
நுணுக்கங்களைப் பற்றிய மிக முக்கியமான தீர்ப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
மரபணு பேடண்ட்டுகளை ரத்து செய்யக் கோரும் சில தன்னார்வ அமைப்புகள் நேற்று
இரவிலிருந்தே கோர்ட் வாசலில் தங்கி ஆர்ப்பாட்டம் நடத்தத் தயாராக உள்ளன.
இந்த வழக்கை விசாரிக்கும் நீதியரசர் பர்மிங்ஹாம், கடந்த காலத்தில் பெரிய மருந்துக்
கம்பெனிகளுக்கு சாதகமான பல தீர்ப்புக்களை வழங்கியவர் என்பது குறிப்பிடத் தக்கது.
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
 
கேத்ரின் அட்வகேட்,
 
அன்புள்ள திரு ப்ளேக்,
என் கட்சிக்காரர் திரு. ஜோனதன் மீஸ் ப்போதும் தங்கள் கம்பெனியுடன் சமாதான
உடன்படிக்கை காணத் தயாராக உள்ளார் என்பதை நினைவு படுத்த விரும்புகிறேன்.
உண்மையுள்ள,
கேத்ரின்
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
 
மார்ட்டின் ப்ளேக்
தலைமை சட்ட ஆலோசகர்
கெகல்மான்-பால்ஸ்டன் கம்பெனி
 
மகளே கேத்ரின்,
நீ எந்தக் காலேஜில் சட்டம் படித்தாய் ?... பாவம், ஏதோ தேங்காய் மூடி வக்கீல்
போலிருக்கிறது. எப்படியும் நாங்கள்தான் ஜெயிக்கப் போகிறோம். எனவே, தோற்கிற
கட்சியிடம் பேச்சுவார்த்தைக்கு என்ன ருக்கிறது ?
உன்னுடைய அடுத்த கேஸாவது உருப்படியாக அமைய வாழ்த்துக்கள்.
 
வாஞ்சையுடன்,
மார்ட்டின் ப்ளேக்
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
- -
நியூயார்க் டைம்ஸ்
ஜோனதன் மீஸுக்கு சிறை!
ஜீன் திருட்டு வழக்கில் தீர்ப்பு!
 
கெகல்மான்-பால்ஸ்டன் கம்பெனி உரிமம் பெற்றுள்ள மரபு அணுக்களைத் திருடியதாகத்
தொடுக்கப்பட்ட வழக்கில் ஜோனதன் மீஸ் குற்றவாளிதான் என்று நீதிபதி பர்மிங்ஹாம் ன்று
தீர்ப்பளித்தார்.கம்பெனியிடம் அனுமதி பெறாமல் நோய் எதிர்ப்பு ஜீன்களை உடலில்
சுமந்துகொண்டு அலைந்த குற்றத்திற்காக மீஸுக்கு ஆறு மாத சிறைத்தண்டனை விதித்த
நீதியரசர்....
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
அனுப்புநர்: ராபர்ட் பால்ஸ்டன்
பெறுநர் : மார்ட்டின், சட்டத் துறை
 
மார்ட்டி,
நான்தான் அப்போதே சொன்னேனே, உனக்கு உடம்பெல்லாம் மூளை! என்ன மாதிரி
விளம்பரம் கிடைத்திருக்கிறது நமக்கு, பைசா செலவில்லாமல்... ஜீனியஸ் !
உனக்காகவே ஒரு சின்ன வெற்றி விழா ஏற்பாடு செய்திருக்கிறேன் : பெண்டாட்டியை
அழைத்துக் கொண்டு ஜாலியாக ஒரு ட்ரிப் அரூபா தீவுக்குப் போய்விட்டு வாயேன்; கம்பெனி
செலவில்.
- பாப்
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
அனுப்புநர்: ராபர்ட் பால்ஸ்டன்
பெறுநர் : மார்ட்டின், சட்டத் துறை
 
மார்ட்டி,
அந்தப் பயல் ஜெயிலுக்குப் போனதுடன் நமக்கு எல்லா பப்ளிஸிடியும் அடங்கிவிட்டது.
மறுபடியும் என் தோள் தினவெடுக்கிறது - ந்தப் புது ஐடியா சரிவருமா பார் : என்
பெண்தான் சொல்லிக் கொண்டிருந்தாள் - ஏதோ விஞ்ஞானப் பத்திரிகையில் படித்தாளாம்,
அந்த புரொபசர் அல்பர்ட்டன் ருக்கிறார் ல்லையா ? அவர் சில ஜீன்களை வைத்துக்
கொண்டு ஆராய்ச்சி செய்து கடைசியில் வைரஸைக் கண்டுபிடித்தார். அதே வைரஸ்
ஜீன்களைத்தான் நாம் மீஸிடமிருந்து எடுத்த ஜீன்களுடன் சேர்த்து மருந்து தயாரித்தோம்.
 
எனக்கு ந்த விஞ்ஞான ழவெல்லாம் ஒன்றும் விளங்கவில்லை - ஆனால் ஒன்றுமட்டும்
புரிகிறது - நாம் பேடண்ட் வாங்கியிருக்கிற ஜீன்களை வைத்துத்தான் அந்த மனிதர்
ஆராய்ச்சிக் கட்டுரை எழுதி உலகமெல்லாம் பிரசுரித்துப் பெயர் வாங்கிவிட்டார். ஆகவே
நாம் புரொபசர் அல்பர்ட்டன் மீதே ஒரு கேஸ் போட்டால் என்ன ? . . .